“தா டிரஸ்ட்டின்” நன்றி கடிதம் – 09.02.2023
“தா டிரஸ்ட்டின்” 34 வது ஆண்டுகளாக தொடர்ந்து சேவை பயணத்தில் பயணித்து வருகிறோம் தீபாவளி நல்வாழ்த்துகளுடன், ஆதரவுற்ற 12 மாணவ மாணவியருக்கு நோட்டு புத்ததங்களும் மூன்று மாணவ மாணவியருக்கு கல்லுரி கட்டணமும், இரண்டு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியும் மற்றும் சிறுதொழில் தொடங்க ஒருவருக்கு நிதி உதவியும் முதியோர் இல்லத்துக்கு இனிப்பு,காரம் வழங்கப்பட்டது. 26.01.2023 குடியரசு தின விழா அன்று ஆர் எஸ் புறம் பி.வி.பி நினைவு அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பிஸ்கட் மற்றும் சாக்லேட் வழங்கப்பட்டது .(ஆகஸ்ட் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை ) ஆன செலவுகளின் மொத்த மதிப்பு ரூபாய்.45,000/- என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்விழாவிற்கு பொருளுதவி தந்து உதவிய அனைவருக்கும் “தா டிரஸ்ட்டின்” சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
“தா டிரஸ்ட்ன்” 34ம் ஆண்டு விழா 15.08.2022 அன்று ஆர்.எஸ்.புரம், அன்னப்பூர்ணா கலையரங்கில் மாலை 6.00 அளவில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கோவையில் கொரானா காலங்களில் தனது உயிரையும் பொருட்படுத்துதது துணிவுடன் சேவை மனப்பான்மையோடு பணியாற்றியவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுபரிசு வழங்கி 75 நபர்களுக்கு தலா ரூபாய்.1,000/- வழங்கி சிறப்பு விருந்தும் அளிக்கப்பட்டது.
கொரவிக்க தெரிந்தஎடுக்கப்பட்டவர்களின் விபரம்:-(1).கோவை மருத்துவ கல்லுரி மருத்துவமனை-11 (2).அமரர் ஊர்தி ஓட்டுநனர்கள்–8 (3).ஆத்துப்பாலம் மயானகுழு-8 (4).சுடர் அறக்கட்டளை-7 (5).ஈஷா யோகா மையம்-20 (6).தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம்-15 (7).ஆத்மா அறக்கட்டளை-6 மொத்தம்: 75 நபர்கள்.
இவ்விழாவில் நினைவு பரிசினை பெற்று கொண்டவர் 75 பேர்களும் தங்களின் குடும்பத்தினரோடு “தா டிரஸ்ட் மென்மேலும் வளரவேண்டுமென்று “தா டிரஸ்டிகளையும்” சிறப்பு விருத்தினர்களையும், ,நன்கொடையாளர்களையும், தன்னார்வலர்கள்களையும் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் வழங்கி சென்றனர் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
இப்படிக்கு,
என்றும் உங்களுடன்,
“தா டிரஸ்ட்”